வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

இன்று முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

 

பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக்கூட்டம் நடக்கிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அவரது உரையில், அரசின் கொள்கைகள் மற்றும் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டுக்கான (2019-2020) பொருளாதார ஆய்வறிக்கையை, பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடியாக இந்த ஆய்வு அறிக்கை இருக்கும்

பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாகவும் வெற்றிகரமாகவும் செயல்பட அனைத்து எம்பிக்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1,061 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன