செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30
Shadow

அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையின் நகலை கிழித்து வீசிய பெண் சபாநாயகர்!

 

 

சட்டசபையில் கவர்னர் உரையை எதிர்க் கட்சியினர் கிழிப்பது, பட்ஜெட் உரையை கிழித்து எறிவதெல்லாம் ஏதோ நம்மூரில் மட்டுமே என நினைக்கிறீர்களா…

இந்த உரை கிழிப்பு இங்கே மட்டுமல்ல உலகம் முழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

உலக வல்லரசு நாடுகளில் முதன்மை இடத்தில் உள்ள அமெரிக்காவில் உள்ள செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் (ஸ்டேட் ஆப் தி யூனியன்) ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மூன்றாவது முறையாக உரையாற்றினார்.


வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் சுமார் ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் உரையாற்றினார்.டிரம்பின் உரையின் போது  பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். உரையை தொடங்குவதற்கு முன் டிரம்ப் தான் பேச உள்ள உரை அடங்கிய பைலை நான்சி பெலோசியிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு டிரம்புக்கு கை கொடுக்க நான்சி கையை நீட்ட… டிரம்ப் அதை சட்டை செய்யாமல் திரும்பி பார்வையாளர்கள் மத்தியில் பேசத் தொடங்கினர்.
இதனால் நான்சி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

டிரம்ப் உரையாற்றி முடித்ததும், தனது மேசையில் இருந்த டிரம்ப் பேச்சின் நகலை நான்சி பெலோசி கிழித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

289 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன