செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

கால்வாய் திட்டத்தை எதிர்த்து தம்பதியின் நிர்வாண போராட்டம்… இங்கல்ல போலந்தில்!

 

கால்வாய் திட்டத்தை எதிர்த்து தம்பதியின் நிர்வாண போராட்டம்… இங்கல்ல போலந்தில்!

போராட்டம் நடத்துவதில் கூட வினோதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவதில் வெளி நாட்டவர்களை மிஞ்ச முடியாது… ஒரு கால்வாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தம்பதி நிர்வாணமாக படுத்து போராட்டம் நடத்தியதோடு சுற்றிலும் ஆட்களை நிறுத்தி அவர்கள் கைகளில் “காதல் செய்யுங்கள்… கால்வாய் வேண்டாம்” என எழுதப்பட்ட அட்டைகளை பிடித்திருந்தார்கள்.

போலந்து நாட்டில் பால்டிக் கடலில் இருந்து கிழக்கு கடலோர பகுதியை பிரிக்கும் குறுகலான ஒரு நில பரப்பை குறைத்து ஒரு கால்வாய் அமைக்கும் திட்டத்தை ஆளும் சட்டம் மற்றும் நீதிக்கட்சி நிறைவேற்ற விரும்புகிறது.

இப்படி செய்வது, அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்கு தேவையாக இருக்கிறது என்று அந்த கட்சி கூறுகிறது. இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு கவலைப் படுகிறது.

ஆனாலும் இந்த திட்டத்தை போலந்து அரசு நிறைவேற்றுவதில் தீவிரமாக இருப்பதால் அதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த நிலையில், கால்வாய் திட்டம் நிறைவேற்ற உள்ள விஸ்டுலா ஸ்பிட் என்ற இடத்தில் ஒரு தம்பதியர், காதலர் தினத்தன்று தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஒரு வினோதமான போராட்டம் நடத்தினர். அவர்கள் அங்கு ஒரு படுக்கையில் ஆடையின்றி படுத்துக்கிடந்து போராட்டம் நடத்தினர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவரம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனதால் உலகம் முழுக்க கவனிக்கப்படும் விஷயமாகி போனது இந்த போராட்டம்.

நம்மூரிலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஆறு வழிச்சாலை, 8 வழிச்சாலைன்னு, ஏகப்பட்ட திட்டங்கள் மக்களை பாதிக்க வரப்போகுது.

267 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன