வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

அஜீத்துக்கு ஷூட்டிங்கில் காயம்…?! தள்ளி வைக்கப்பட்ட வலிமை!

 

அஜீத்துக்கு ஷூட்டிங்கில் காயம்…?! தள்ளி வைக்கப்பட்ட வலிமை!

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் இணைந்திருக்கிறார் அஜீத்.

இந்த படத்தில் அஜீத் ஜோடி யார், வில்லன் யார் என்பதெல்லாம் அறிவிக்கப்படவில்லை.

ஷூட்டிங் மட்டும் நடந்து வந்தது. இந்த நிலையில் வலிமை ஷூட்டிங்கை 2 மாதம் தள்ளி வைத்து விட்டாராம் அஜீத்.

அஜீத் ஷூட்டிங் நேரம் போக மற்ற நேரங்களில் குட்டி விமானங்களை இயக்கும் ஆர்வம் உள்ளவர். அதோடு பைக் ஓட்டுவது அஜீத்துக்கு ரொம்ப பிடிக்கும்.

வலிமை படத்திலும் பைக் ரேஸ் காட்சிகள் இடம் பெற்று உள்ளதாம். அப்படி ஒரு காட்சி படமாக்கும் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதால்தான் வலிமை ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டதாம். ரசிகர்களும் கெட்வில் சூன் தல என சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்து வருகின்றனர்.

அதே நேரம் அஜீத் காட்சிகள் முடிந்து மற்ற நடிகர்கள் தேர்வுக்கு இந்த இடைவெளியை பயன்படுத்த ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

546 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன