வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… ஷாக் ஆன விஜய்!

 

 

திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… ஷாக் ஆன விஜய்!

விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் அறிவித்த நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஷூட்டிங் போனது.
விஜய்சேதுபதி வில்லனாக மோதும் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கலந்து கொண்டபோது விஜய்சேதுபதி திடீரென விஜய்யை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாராம்

வழக்கமாக விஜய்சேதுபதி தனது ரசிகர்களை சந்திக்கும் போதும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கம்.
அதேபோல விஜய்யையும் கட்டிப்பிடித்து எதிர்பாராதவிதமாக முத்தம் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்த சம்பவத்தை பார்த்த படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்  இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விஜய்சேதுபதிக்கு நன்றி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் காட்சிகள் ஹைலைட்டாக இருக்குமாம்.

651 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன