புதன்கிழமை, மே 15
Shadow

Tag: Master

ஜப்பானில் நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்!

ஜப்பானில் நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். வருடத்திற்கு ஒரு படம் வீதம் விஜய் நடித்து வருவதால், ஒவ்வொரு வருடமும் அவருடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படும். வாத்தி கம்மிங் பாடலில் ஒரே ஒரு வரியில் பாடலையே முடித்திருப்பார் இசையமைப்பாளர் அனிரூத்.   விஜய்யை காட்டிலும் வில்லனாக நடித்திருந்த விஜய்சேதுபதி ஸ்கோர் செய்து தன்னை வில்லனாகவும் நிரூபித்துக் காண்பித்திருந்தார். தமிழ்நாட்டை தாண்டி பிற மொழிகளிலும் படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலும் தமிழ் படங்கள் வெளி மாநிலங்களை தாண்டி வெளிநாடுகளிலும் வரவேற்பை பெறுவதுண்டு. அந்த வகையில் ஜப்பானில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி திரையிடப்படவுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்....
முதலிடம் பிடித்த விஜய்யின் ‘மாஸ்டர்’!

முதலிடம் பிடித்த விஜய்யின் ‘மாஸ்டர்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முதலிடம் பிடித்த விஜய்யின் ‘மாஸ்டர்’! பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி, 2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஜனவரி மாதம் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘மாஸ்டர்’ படம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்பிரன்ட்ஸ் என்கிற வெப் தொடர் இரண்டாம் இடத்தையும், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான தி வைட் டைகர் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக தமன்னா நடிப்பில் அண்மையில் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் எனும் வெப் தொடர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் 6வது ...
‘மாஸ்டர்’ படத்தின் ரீமேக் உரிமையை பெற பாலிவுட்டில் கடும் போட்டி!

‘மாஸ்டர்’ படத்தின் ரீமேக் உரிமையை பெற பாலிவுட்டில் கடும் போட்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
‘மாஸ்டர்’ படத்தின் ரீமேக் உரிமையை பெற பாலிவுட்டில் கடும் போட்டி! கொரோனா பரவலுக்கு பின் களையிழந்து காணப்பட்ட திரையரங்குகளுக்கு, புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்பட்ட போதிலும் நிறைய இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான உரிமையை பெற இந்தி தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க மாஸ்டர் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம...
தன்னை சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தன்னை சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தன்னை சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் OTT தளத்தில் வெளியாகி வருகிறது.ஆனால், மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படத்தை OTTயில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதாலும் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது இருப்பினும் கொரோனா பிரச்சினை காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. பல கோடிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெறும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டால் வசூலில் நிச்சயம் துண்டு விழும் என்று பலரும் கருதுகின்றனர் இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய்கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழன...
பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்!

பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டுக்காக மாஸான வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த டுவிட்டில் “ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்... தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்” பிரம்மாண்டமான ரிலீஸ் அப்டேட் நாளை பிற்பகல் 12.30 ...
சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

CINI NEWS, HOME SLIDER, REVIEWS, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், நடிகர்கள், விமர்சனம்
தீபாவளி அன்று ரிலீஸ் ஆன புதுப்பட டீசர்கள் குறித்த கோடஙகி பார்வை https://youtu.be/HiesRfT8lkU
திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… ஷாக் ஆன விஜய்!

திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… ஷாக் ஆன விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்... ஷாக் ஆன விஜய்! விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் அறிவித்த நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஷூட்டிங் போனது. விஜய்சேதுபதி வில்லனாக மோதும் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கலந்து கொண்டபோது விஜய்சேதுபதி திடீரென விஜய்யை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாராம் வழக்கமாக விஜய்சேதுபதி தனது ரசிகர்களை சந்திக்கும் போதும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கம். அதேபோல விஜய்யையும் கட்டிப்பிடித்து எதிர்பாராதவிதமாக முத்தம் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்த சம்பவத்தை பார்த்த படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்  இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விஜய்சேதுபதிக்கு நன்றி கூறியுள்ளா...
வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்!

வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்! வருமானவரித் துறை சோதனைக்கு பின்னர் விஜய் தனது மாஸ்டர் ஷூட்டிங்கில் வழக்கம் போல கலந்து கொண்டார். விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்திக்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யூனிட் வேன் மீது ஏறி ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். அப்போது ரசிகர்கள் விஜய்யை வாழ்த்தி கோஷம் போட்டனர். ஒரு கட்டத்தில் தனது செல் போன் மூலம் ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்தார் விஜய். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஜய் அருகில் வர ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் ரசிகர்களை விலக்கி விஜய் கார் வெளியே செல்ல வழி ஏற்படுத்தினர். ...