வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

ஜப்பானில் நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்!

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர்.
வருடத்திற்கு ஒரு படம் வீதம் விஜய் நடித்து வருவதால், ஒவ்வொரு வருடமும் அவருடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படும்.

வாத்தி கம்மிங் பாடலில் ஒரே ஒரு வரியில் பாடலையே முடித்திருப்பார் இசையமைப்பாளர் அனிரூத்.

 

விஜய்யை காட்டிலும் வில்லனாக நடித்திருந்த விஜய்சேதுபதி ஸ்கோர் செய்து தன்னை வில்லனாகவும் நிரூபித்துக் காண்பித்திருந்தார். தமிழ்நாட்டை தாண்டி பிற மொழிகளிலும் படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

பெரும்பாலும் தமிழ் படங்கள் வெளி மாநிலங்களை தாண்டி வெளிநாடுகளிலும் வரவேற்பை பெறுவதுண்டு. அந்த
வகையில் ஜப்பானில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி திரையிடப்படவுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

125 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன