வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: Vijay Sethupathy

ஜப்பானில் நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்!

ஜப்பானில் நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். வருடத்திற்கு ஒரு படம் வீதம் விஜய் நடித்து வருவதால், ஒவ்வொரு வருடமும் அவருடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படும். வாத்தி கம்மிங் பாடலில் ஒரே ஒரு வரியில் பாடலையே முடித்திருப்பார் இசையமைப்பாளர் அனிரூத்.   விஜய்யை காட்டிலும் வில்லனாக நடித்திருந்த விஜய்சேதுபதி ஸ்கோர் செய்து தன்னை வில்லனாகவும் நிரூபித்துக் காண்பித்திருந்தார். தமிழ்நாட்டை தாண்டி பிற மொழிகளிலும் படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலும் தமிழ் படங்கள் வெளி மாநிலங்களை தாண்டி வெளிநாடுகளிலும் வரவேற்பை பெறுவதுண்டு. அந்த வகையில் ஜப்பானில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி திரையிடப்படவுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்....
“ரெண்டு பேரையும் தான் லவ் பண்றேன்” – கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதி பட புரோமோ!

“ரெண்டு பேரையும் தான் லவ் பண்றேன்” – கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதி பட புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்துவாக்குல ரெண்டு காதல்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்க, ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். இப்படத்தின...
மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் ,நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். எம்.சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர் .அதன்படி மாமனிதன் திரைப்படம் வருகிற மே மாதம் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். https://twitter.com/seenuramasamy/status/1506452139647721481?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1506452139647721481%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcinema.maalaimalar.com%2Fcinema%2Fcinemanews%2F2022%2F03%2F23110958%2F3604879%2FTamil-...
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு!

விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு! புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா இயக்கிய புஷ்கர் - காயத்ரி இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதனை தொடர்ந்து இப்படத்தின் அறிவிப்பொன்றை இயக்குனர் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என ப...
‘தெருகூத்துக் கலைஞனி’ல் மீண்டும் இணைந்திருக்கும் எல். ராமச்சந்திரன் – விஜய் சேதுபதி கூட்டணி

‘தெருகூத்துக் கலைஞனி’ல் மீண்டும் இணைந்திருக்கும் எல். ராமச்சந்திரன் – விஜய் சேதுபதி கூட்டணி

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ‘தெருகூத்துக் கலைஞனி’ல் மீண்டும் இணைந்திருக்கும் எல். ராமச்சந்திரன் - விஜய் சேதுபதி கூட்டணி விஜய் சேதுபதியின் ‘தெருகூத்து கலைஞன்’ காலண்டர் வெளியீடு தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இது அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகவே தொடர்கிறது. நலிவடைந்து இருக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் நிதி உதவி அளித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான முனைவர் எல். ராமச்சந்திரன் பிரத்யேக முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். தெருக்கூத்து க...
தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!

தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனர் மணிகண்டனுடன் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிகண்டனுடன் ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய விஜய் சேதுபதி, தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?!

மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?! பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 96. முழு காதல் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தன. தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தை தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. இந்நிலையில், இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன் கைவசம் வைத்துள்ள படங்களை முடித்துவிட்டு, பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி!

விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி! கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சலார் படத்தை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சைரா நரசிம்மா ரெட்டி, உப்பென்...
இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்!

இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்! ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன. விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது லாபம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் ரம்ஜான் பண்டிகை நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி எடுத்த போட்டோ ஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. Man of Fusion என்ற தலைப்பில் பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன் இந்த புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்....