சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

“கன்னி மாடம்” சமூகத்துக்கு தேவையான பாடம் – கோடங்கி விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் எப்பவாது இப்படி படம் வரும்… படம் பார்த்து விட்டு நெஞ்சு கனக்க… தியேட்டரை விட்டு யார்கிட்டயும் பேசாமல் ஏதோ ஒரு மன பாரத்தோடு போவோம் பாருங்க அந்த வலி சொன்ன புரியாது… அப்படி இருக்கு போஸ் வெங்கட் இயக்கி இருக்கும் கன்னிமாடம்.

யார்ரா இந்த பொண்ணு இவ்ளோ நாளா எங்கடா இருந்துச்சி… அட்சர சுத்தமா கதைக்கு தேவையான நடிப்பு… சோகத்தை முகத்துல வைச்சி படம் பாக்குற அத்தனை பேரோட அனுதாபத்தையும் அள்ளிக்குது… கருப்பழகியா சரிதா அறிமுகம் ஆனபோது என்ன மாதிரி ஒரு பீல் இருந்துச்சோ அப்படியிருக்கு காயத்ரி முகத்துல… தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகை கிடைச்சிருக்கு…

ஸ்ரீராம் கார்திக்.. பக்கத்து வீட்டு பையனாட்டம் அவ்ளோ யதார்த்தம். நல்ல கதைகள் மட்டும் தேர்வு பன்னா ஸ்ரீராம் ஒரு ரவுண்டு வரலாம்.

அதோடு ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி இப்படி எந்த கேரக்டரும் தேவையில்லாம இல்ல.

முதல் பாதி படம் பாக்கும் போது படம் வேற எங்கயோ போய். வழக்கமான சினிமாத்தனமாதான் முடியும்னு யோசிக்க வைக்குது.

பின்பாதி தொடங்கி கிளைமாக்ஸ் வர்ற வரைக்கும் இந்த கதை எப்படி முடியும்னு யூகிக்க முடியாத மாதிரி அவ்ளோ யதார்த்தமான மேக்கிங்.

கிளைமாக்ஸ் அதிர்ச்சி ரகம்…

ஆணவ கொலை, சாதி வெறி இது இரெண்டையும் கையில புடிச்சி சம்மட்டியால அடிச்சி வெளுக்கிறரர் இயக்குனர் போஸ் வெங்கட்.

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரிச்சி இருக்கார். ஹரிஷ் சாய் இசையமைத்துள்ளார். ஹரிஷ் ஜெ இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மொத்தத்துல கன்னி மாடம் ஆணவ கொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான நல்ல பாடம்!

– கோடங்கி

631 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன