வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

சைக்கோ மிஷ்கின் இம்சை… கடுப்பான விஷால்… துப்பறிவாளன் 2 படமாகாத கதை!

 

 

இம்சை மிஷ்கின்… கடுப்பான விஷால்… துப்பறிவாளன் 2 படமாகாத கதை!

விஷால் நடித்து தயாரித்த படம் துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கத்தில் வெளியா இந்த படம் வெற்றிப் படமாக அமைந்ததோடு ரசிகர்களுக்கு அடுத்த பாகத்தை கொடுத்தாலும் அதுவும் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக மீண்டும் மிஷ்கின் இயக்க விஷால் நடித்து தயாரிக்க துப்பறிவாளன் 2 தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்தே இயக்குனர் மிஷ்கின் செயல்பாடுகள் விஷாலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் மிஷ்கின் இயக்கிய சைக்கோ வெளியானது. இந்தப்படம் வெற்றிப்படம் என சொல்லிக் கொண்ட மிஷ்கின் தனக்கு பேசிய சம்பளத்தை விட அதிக சம்பளத்தை தரவேண்டும் என சொன்னதோடு ஷூட்டிங் பணிகளையும் சொதப்பி இருக்கிறார்.

இதனால் கடுப்பான தயாரிப்பாளர் நடிகர் விஷால் பலமுறை பேசிப்பார்த்தும் இயக்குனர் மிஷ்கின் உச்சாணிக் கொம்பில் ஏறிக் கொண்டு இறங்கி வர மறுக்க… உச்சக்கட்ட கடுப்பில் படத்தை நிறுத்தியதோடு, மிஷ்கினை இயக்குநர் பொறுப்பில் இருந்து தூக்கி எறிந்திருக்கிறார் விஷால் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.

மிஷ்கினை வெளியேற்றியதற்கு சம்பள சிக்கல் மட்டும் காரணம் இல்லையாம்… முதற்கட்ட படப்பிடிப்பில் திட்டமிட்டதை விட பட்ஜெட்டை இழுத்து விட்டதோடு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தாமதமாக வருவது , லொகேஷன் முடிவு செய்வதில் சொதப்பல் என ஏகப்பட்ட காரணங்களால் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கின் தூக்கப்பட்டாராம்.

இப்போது மீதம் உள்ள காட்சிகளை விஷாலே இயக்கி முடிக்க திட்டம் வைத்திருக்கிறார்.

துப்பறிவாளன் 2 படத்தின் படமாக்கப்படாத உண்மை கதையாக இது இருந்தாலும் மிஷ்கின், விஷால் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

709 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன