வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

இந்தியன் 2 விபத்து விளக்கம் தர கமலுக்கு போலீஸ் சம்மன்!

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் விபத்து குறித்த விசாரணையில் பதில் அளிக்கும் படி நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி ஷூட்டிங் ஸ்பாட்டில் கடந்த வாரம் திடீரென கிரேன் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இதில் ஒரு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் அதே இடத்தில் பலியானார்கள்
10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

இந்நிலையில் இந்த விசாரணையின் போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி நடிகர் கமல் ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

352 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன