வெள்ளிக்கிழமை, மே 1
Shadow

பொன்னியின் செல்வன் படத்தில் வில்லனா விக்ரம்பிரபு!?

 

 

பிரபல எழுத்தாளர் கல்கியின் மிகப் பிரபலமான “பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார்.

இதற்கு முன் எம்.ஜி.ஆர்.உட்பட பலர் இந்த நாவலை படமாக்க முயற்சித்து முடியாமல் போனது.

மணிரத்னம் இயக்கும் இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக ரூ.800 கோடி செலவில் இந்த படத்தை 2 பாகங்களாக உருவாக்குகிறார்கள்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் விக்ரம் பிரபு பேட்டி அளித்த போது “நீங்க இந்த படத்தில் நெகடிவ் ரோல் தான் நடிக்கிறீங்களா” என்ற கேள்விக்கு நடிகர் விக்ரம் பிரபு “இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்” என்று பூடகமாக பதிலளித்தார். இப்படத்தில் எனக்கு தெரிந்த வரை 27 பேர் நடித்து வருகிறார்கள்” என்றும் கூறினார்.

674 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன