புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ரஜினி,விஜய்,அஜீத் பற்றி கருத்து சொல்லி சிக்கிய விவேக் ரசிகர்களை குரங்கு என குறிப்பிட்டதால் மீண்டும் சர்ச்சை!

 

 

ரஜினி, விஜய், அஜீத் ஆகியோரிடம் பிடித்த பண்புகள் என கருத்து வெளியிட்டதால் கமல் ரசிகர்களிடம் சிக்கிய விவேக்!

நடிகர் விவேக் அடிக்கடி ஏதாவது பேசியோ அல்லது பதிவிட்டோ சர்ச்சைகளில் சிக்குவார்.

இந்த முறை தனது “குருவி” பக்கத்தில் “எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள்.
1. யார் பற்றியும் அவதூறு பேசாதே- திரு. ரஜினிகாந்த்.
2.ignore negativity- திரு. விஜய்.
3.வாழு;வாழ விடு-திரு. அஜீத்” என பதிவிட அந்த பட்டியலில் கமல் பெயர் இல்லை என கமல் ரசிகர்கள் விவேக்கை வறுத்தெடுத்தார்கள்.

அதில் சிலரது கேள்விகளுக்கு விவேக் பதில் பதிவும் போட குருவி பக்கம் பரபரப்பாக காணப்பட்டது.

ஏற்கனவே தான் ஹீரோவாக நடித்து நீண்டகாலமாக கிடப்பில் இருந்து ரிலீசுக்கு வந்த பாலக்காட்டு மாதவன் படம் ரிலீஸ் ஆன அதே நேரத்தில் தனது பாபநாசம் படத்தை கமல் ரிலீஸ் செய்து தனது படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டார் என்ற வருத்தமும் விவேக்குக்கு உண்டு. இதையெல்லாம் மனதில் வைத்து இப்போது தேவை இல்லாமல் கமலை மட்டும் விலக்கி விட்டு மற்றவர்கள் பற்றி கருத்து போட்டு நெட்டிசன்கள் மீண்டும் தன்னைப்பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் விவேக் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதே நேரம் வலைதளங்கங்களில் தன்னை அவதூறு செய்தவர்களுக்காக மீண்டும் ஒரு பதிவை எழுதியிருக்கிறார் விவேக்… அதில் “வலைத்தளத்தில் 100 பேரில் 98 பேர் நேர்மறையோரே! 2 பேர் எதிர்மறையோர் இருக்கலாம்.அவர்களை அலட்சியம் செய்யப் பழகுங்கள்.சாதனையாளரை பிரபலங்களை பழித்தும் இழித்தும் பதிவிடுவதில் அவர்கள் சுகம் காண்பர். புலி தன் காயத்தை நக்கி ஆற்றும்; குரங்கு தன் புண்னை பிய்த்து ரணமாக்கி இறக்கும்.அவரவர் வழி!” என குறிப்பிட்டு யாரை புலி என்கிறார், யாரை குரங்கு என்கிறார் விவேக் ரசிகர்களையா?

1,229 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன