சனிக்கிழமை, மே 18
Shadow

ரஜினி திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்த ஜோதிடரின் ஆலோசனைதான் காரணமா!?

 

தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் ஆன்மீகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்.

கடவுள் நம்பிக்கை, ஆன்மீக பயணங்களில் அடிக்கடி ஈடுபடுபவர். பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் எப்படியும் அரசியலுக்கு வந்து விட வேண்டும் என காத்திருக்கும் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக கடந்த ஆண்டு தான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நல்லது செய்ய காத்திருக்கிறேன். எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என அறிவித்திருந்தார்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து ஆளாளுக்கு கருத்துக்களை அள்ளி விட்டனர்.

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த்.

இந்த ஆலோசனை குறித்து யாரும் எந்த கருத்தையும் வெளியில் குறிப்பாக மீடியா கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் அதை மீறி தகவல் வெளியானால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று ரஜினி எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடந்தாக வேண்டும். சூழல் இப்படி இருக்க ரஜினி இனி கட்சி ஆரம்பித்து ஊர் ஊராக மக்களை திரட்டி சேர்த்து தேர்தலில் நிற்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இந்த சூழலில் ரஜினிகாந்த் மீண்டும் தனது மன்ற நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார்.

ரஜினிக்கு மிகவும் இஷ்ட தெய்வமான ராகவேந்தர் தினமாக கூறப்படும் வியாழக்கிழமை தனது அரசியல் நிலைப்பாட்டை ரஜினிகாந்த் அறிவிக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார்.

இதற்கிடையில் இந்த சந்திப்புக்கும் அறிவிப்பு வெளியிடுவத்ற்கும் பிரபல ஜோதிடர் பாலாஜி தான் காரணம் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.

கடந்த வாரம் போயஸ்கார்டன் வீட்டுக்கு ஜோதிடர் பாலாஜியை வரவழைத்து பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.

ஏற்கனவே இந்த பாலாஜி ஜோதிடர் எம்.பி.தேர்தலுக்கு முன்பே மீண்டும் பிரதமராக மோடிதான் வருவார் என இராஜகோபுரம் என்ற ஆன்மீக இதழில் கணித்திருந்தார்.

இவரின் ஆலோசனை படிதான் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பே நடக்கிறதாம்.

அரசியல் அறிவிப்பு நேரடியாக இல்லாமல் இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவருக்கே உரிய ஸ்டைலில் ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது.

இதே ஜோதிடர் முன்பு ஒரு முறை ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து ஒரு கருத்து சொல்லி ரசிகர்களின் அர்ச்சனையில் சிக்கியவர். ஆனால் அவர் சொன்னது போல ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு சில நாட்கள் முழு ஓய்வில் இருந்தார் என்பதும், அதன் பிறகே இந்த பரபரப்புகள் தொடங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

2,000 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன