ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்!

 

முட்டாள்கள் தினமாக கருதப்படும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்!

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், கேட்க வேண்டிய கேள்விகள் குறித்தும் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட பணியின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், முதற்கட்ட பணியில் வீடுகளை கணக்கெடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது.

இந்தநிலையில், மத்திய அரசின் அறிவிப்பு, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்கும் என தெரிகிறது. ஏப்ரல் முதல் தேதி முட்டாள்கள் தினமாக கடைபிடிப்பார்கள். அந்த தினத்தில் இருந்து தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குகிறதாம்.

650 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன