ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை… கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் – ரஜினி அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்!

 

 

நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை… கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் – ரஜினி அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்!

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியது;

1996ல் இருந்து 25 வருடமாக நான் அரசியலுக்கு வரேன் என சொல்கிறேன் என்கிறார்கள் ஆனால் நான் 2017ல் தான் அப்படி கூறினேன்

இந்தியாவில் தேசிய கட்சியை தவிர மாநில கட்சியில் ஆட்சி கட்சிக்கு ஒருவரே தலைவர். அவ்வாறு இருப்பதால் மக்களுக் சரி கட்சியிலும் சரி யாரும் கேள்வி எழுப்ப முடியவில்லை

அதனால் நாம் ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை முடிவு செய்து உள்ளோம்.

மக்கள் மாற்று அரசியலை தான் கேட்டார்கள்

நான் இந்த திட்டத்தை அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளிடம் இது குறித்து ஆலோசனை செய்தேன்

அரசியல்வாதிகள் இந்த திட்டத்தை ஏற்கவில்லை நீங்கள் முதல்வர் இல்லை என்றால் சரியாக வராது என அனைவரும் தெரிவிதார்கள் ஆனால் சில இளைஞர்கள் நான் கூறிய கருத்தை ஏற்று கொண்டார்கள்.

நான் எப்போதும் முதல்வர் பதவியை நினைத்து பார்த்தது இல்லை என் ரத்ததிலேயே அது வரவில்லை.

நான் கட்சி தலைவனாக இருப்பேன்.

எதிர்கட்சி மாதிரி இருந்து ஆட்சி தவறு செய்தால் சுட்டி காட்டுவோம்

ஆட்சியில் அன்றாட பணியில் தலையிட மாட்டோம்

கட்சியை சேர்ந்த யாரும் ஆட்சியை தொல்லை செய்ய கூடாது

கட்சி தொடர்பான விழாவை கட்சி தொண்டர்கள் பார்த்து கொள்வார்கள் ஆட்சியாளர்களை தொல்லை செய்ய கூடாது

இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை அதனால் என் கட்சியில் 60 % வரை கவுரவமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்

மீதம் 40% சதவீதம் மாற்று கட்சியில் இருந்து வந்த நல்லவர்கள், சமுதாயத்தில் நல்ல பெயருடன் உள்ள நீதிபதிகள் போன்றவர்களை நானே அழைப்பேன்

இது போன்ற புது மின்சாரம் மாதிரி சட்டமன்றத்தில் சென்ற ஆட்சியை கையில் எடுக்க வேண்டும்.

605 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன