
சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைபடுத்த மத்திய அரசு பரிந்துரை… கொரானா முன்னெச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதபடும் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைபடுத்தி வைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை மார்ச் 31 வரை தனிமைபடுத்தி வைக்க மத்திய அரசு பரிந்துரை செயதாலும் தமிழக அரசு தான் இதில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இம்மூன்று மாவட்டங்களிலும் காய்கறி, பலசரக்கு, பால், மருந்துக் கடைகள் தவிர்த்து மற்ற எல்லா கடைகளும் அடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
தனிமைபடுத்தப்பட்ட 3 மாவட்டங்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். தேவை இல்லாமல் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படாதாம்.
தேவை ஏற்படும் பட்சம் தனிமைபடுத்தப்படும் மாவட்டங்களின் எண்ணிக்கையை மாநில அரசு உயர்த்தி கொள்ளலாம் என மத்திய சுகாதார துறை அறிவித்து உள்ளது.
