திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

கொரானா பீதி… மார்ச் 31வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

 

 

கொரானா பீதி… மார்ச் 31வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

உலகம் முழுதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வரும் கொரானா வைரஸ் உலகம் முழுதும் மிக வேகமாக பரவி வருகிறது.

கொரானா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விமானம், ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநில மாவட்ட எல்லைகளையும் தமிழக அரசு மூடி சீல்வைத்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களை தவிர வேறு எந்த வாகனங்களும் மாநிலத்தில் அனுமதிக்கப்படவில்லை.

கடைகளிலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மருந்தகங்கள், பலசரக்கு கடைகள், பால் வினியோகம் மட்டுமே திறக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஒருவரை ஒருவர் நெருங்கி நிற்க வேண்டாம் என்பதற்காக சமூக விலகலை அரசு கடுமையாக கடைபிடிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் அலைமோதும் கூட்டத்தோடு டாஸ்மாக் கடைகள் மட்டும் வழக்கம் போல செயல்பட்டன. இது குறித்து பல கண்டனங்கள் வந்தபோதும் அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது.

இதற்கிடையில் பாண்டியில் அனைத்து மதுபான கடைகளும் நாளை முதல் மார்ச் 31மாலைவரை மூடப்படும் என பாண்டி முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். இது பாண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை முடிவில் தமிழகம் முழுவதும் நாளை முதல் மார்ச் 31வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி உத்தரவிட்டார்.

இதுவரை அறிவித்த பல அதிரடிகளைவிட முதல்வர் பழனிச்சாமியின் இந்த டாஸ்மாக் மூடும் உத்தரவுக்கு மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைக்கும்.

667 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன