செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 15
Shadow

பால்,மளிகை,காய்கறிகள் கடை திறப்பதில் கடும் கட்டுப்பாடுகள் – முதல்வர் உத்தரவு

 

 

பால்,மளிகை,காய்கறிகள் கடை திறப்பதில் கடும் கட்டுப்பாடுகள் – முதல்வர் உத்தரவு

கொரானா வைரஸ் தாக்கம் படு வேகமாக பரவி வருவதால் ஏற்கனவே நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

அத்தியாவசிய பொருளை விற்கும் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.

பால் விற்பனை வழக்கமாக எல்லா சிறு விற்பனை கடைகளிலும் கிடைக்காது. ஆவின் விற்பனை நிலையங்களிலும், ஆவின் முகவர்களிலும் மட்டுமே கிடைக்கும். அதுவும் காலை 6 மணி முதல் 9 மணிவரை மட்டுமே கிடைக்கும்.

என்று கூட்ட முடிவில் தகவல் வெளியானது. ஆனால் அப்படி நேரம் வைத்தால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்பதால் மளிகை, காய்கறிகள் கடைகள் வழக்கம் போல திறந்திருக்கும்.

அதே நேரம் மக்களின் சமூக விலகலை கடைக்காரர்கள் கண்டிப்பாக கடை பிடிக்கவேண்டும்.

அதிக கூட்டத்தை சேர்த்து கொள்ள கூடாது.

இந்த உத்தரவை முதல்வர் பழனிச்சாமி பிறப்பித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன