செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

கொரானா வைரஸ் பிடியில் பிரிட்டன் பிரதமர்!

 

 

கொரானா வைரஸ் பிடியில் பிரிட்டன் பிரதமர்!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ். இதனால் இதுவரை சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 24 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் அவரது மனைவியுடன் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

இந்த சூழலில் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இந்த சூழலில் நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் அவர் பேசும்போது “எனக்கும் வைரஸ் கிருமி பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. அதன் அடிப்படையில் சோதனை செய்து கொண்டேன். லேசான இருமல் காய்ச்சல் இருக்கிறது. சோதனை முடிவில் கொரானா வந்திருப்பது உறுதியானது. நாட்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். சிறப்பான மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த சூழல் விரைவில் சரியாகும் . அதுவரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இங்கிலாந்து இளவரசர் சார்லசு இந்த வைரஸ் தொற்று காரணமாக தனிமைபடுத்தபட்டு இருக்கிறார். இப்போது அந்த நாட்டின் பிரதமருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

684 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன