சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

தனியார் விமானிக்கு கொரானா!

 

தனியார் விமானிக்கு கொரானா!

உலகை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொடூர கொரானாவை ஒழிக்க உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தெரிந்த பின்னரும் விமான நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை தொடர்ந்து இயக்கி வந்தது.

கொரானா பரவல் தீவிரத்தால் கடந்த 22-ந்தேதிதான் அனைத்து விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. மார்ச் 15-ந்தேதிக்குப்பின் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

உள்நாட்டுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு சென்றவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என்ற அச்சம் நிலவி வந்தது,

இந்த சூழலில் பிரபல  தனியார் விமானத்தை இயக்கிய விமானி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததுள்ளது.

அவர் மார்ச் மாதம் 1-ந்தேதியில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் எதையும் இயக்கவில்லையாம். இறுதியாக கடந்த 21-ந்தேதி சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தை இயக்கியுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுக்கான செய்ததில் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனியார் விமானிக்கு கொரானா பாதிப்பு தெரிந்ததால் விமானிகளுக்கும், விமான பணியாளர்களுக்கும் கொரானா பரிசோதனை செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள்.

435 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன