
ஏப்ரல் 14ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் இணைப்பு துண்டிக்கப்படாது – அமைச்சர் உறுதி
ஏப் 14 ம் தேதி வரை யாருக்கும் மின் துண்டிப்பு இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.சென்னையில் மின்துறை அமைச்சர் பி. தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
24 மணி நேரம்
கொரேனா வைரஸ் காரணமாக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மக்கள் முழுமையாக வீட்டில் இருக்கும்போது, மின்சாரம் தடையில்லாமல் தரவேண்டும் என்பது முதலமைச்சரின் வேண்டுகோள். அந்த அடிப்படையில் நாங்களும் தொடர்ந்து எங்களுடைய மின்வாரிய அதிகாரிகளும்,பணியாளர்களும் 24 மணி நேரம் பணியாற்றிவருகிறார்கள்.
கிட்டதட்ட 80 சதவீத பணிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.எங்காவது பழுது ஏற்பட்டது என்றால் உடனடியாக அங்கு பணியாளர்களை அனுப்பி,பழுதை உடனடியாக நீக்கி,அந்த பகுதியில் மின் தடையில்லாமல் செய்யவேண்டும் என்பதுதான் அம்மா அரசின் எண்ணம்.முதலமைச்சரின் எண்ணம்.

வீடுகளில் மக்கள் தொடர்ந்து இருப்பதால் வீடுகளுக்கு மின்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் தேவையில்லாத காரணத்தினால் தினந்தோறும் 4500 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளது.முதலமைச்சர் அறிவித்தவாறு ஏப் 14 வரை மின்கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு இது குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும்.எந்த இடத்திலும் அதாவது தொழிற்சாலையாக இருந்தாலும் சரி,வீடாக இருந்தாலும் சரி,கடைகளாக இருந்தாலும் சரி மின் துண்டிப்பு என்பது இருக்கக்கூடாது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
எங்கும் மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை.தொழில்சாலைகளில் தொழிலாளர்கள் பலர் இருப்பதால் அவர்கள் சமையல் செய்து சாப்பிடவேண்டும் போன்ற தேவைகளின் காரணமாக அங்கும் மின்சாரம் அளிக்கப்பட்டுவருகிறது.ஆன்லைனின் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் துண்டிப்பு இருக்காது.எங்கேயும் துண்டிப்பு இல்லை.திருவாண்ணாலையில் ஒரு இடத்தில் நடந்துவிட்ட.து.எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் அங்கு பேசி சரிசெய்யப்பட்டு விட்டது.மாநிலம் முழுவதும் எங்கும் மின் துண்டிப்பு இருக்ககூடாது என்று உத்தரவிடப் பட்டுள்ளது.அதன் அடிப்படையில் தற்போது தடையில்லாமல் மின்சாரம் வழங்கிவருகிறோம்.
