ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9
Shadow

ஏப்ரல் 20க்கு பின் எவைகளில் ஊரடங்கு தளர்வு – லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு

 

ஏப்ரல் 20க்கு பின் எவைகளில் ஊரடங்கு தளர்வு – லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு

நாடு முழுவதும் உள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பான வாழ்க்கை பெரிதும் நசிந்து உள்ளது. இது குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.

அதன் பின் அரசு அறிவித்த வழிமுறைகள்.

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

*பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்படும்.

*இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி.

*மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும்.

*வரும் 20ந் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.

*கட்டுமானப்பணிகள் நடைபெறவும் மத்திய அரசு அனுமதி.

*வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி.

*ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.

*ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் .

*மக்கள் கூடும் அனைத்து இடங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்க மே 3 வரை தடை.

*ஏப்ரல் 20க்கு பின் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயம்.

*சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு தொழிற்சாலைகளுக்கு அனுமதி.

*ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி என பல்வேறு விதமான வழிமுறைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

1,057 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன