வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

சாதி பெயரில் அரசின் நிவாரண செய்தி வெளியிட்ட திருவள்ளூர் கலெக்டர் திடீரென பதிவை நீக்கிய மர்மம்!

 

 

சாதி பெயரில் அரசின் நிவாரணம் செய்தி வெளியிட்ட திருவள்ளூர் கலெக்டர் திடீரென பதிவை நீக்கிய மர்மம்!

உலகம் முழுதும் கொரானா பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி எல்லா நாட்டு மக்களையும் வீட்டுக்குள் முடக்கி உள்ளது.

தமிழகத்திலும் கொரானா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழக அரசு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் மாவட்டம் தோறும் கலெக்டர் அலுவலகம் மூலமாக செய்யப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில் ஊத்துக்கோட்டை, பேரண்டூர் கிராமத்தில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஆட்சியாளராக தற்போது பதவியில் இருந்து வருவது மகேஸ்வரி ரவிக்குமார் IAS.

நேற்று முன் தினம் திருவள்ளூர் மாவட்டம் , பேரண்டூர் கிராமத்தில் வழங்கப்பட நிவாரண உதவி பற்றிய தகவலை திருவள்ளூர் ஆட்சியரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில் சில விவரங்களை குறிப்பிட்டிருந்தார்.

அந்த பதிவுகள் தான் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “Tiruvallur Administration assisted 30 ST families,26 Other Families with Grocery & Vegetables .திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, பேரண்டூர் கிராமம் ST இருளர் 30 குடும்பங்கள் மற்றும் BC / MBC குடும்பங்கள் 26 ஆகியவற்றுக்கு அரிசி,மளிகை-காய்கறிகள் வழங்கப்பட்டன” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து குறிப்பிட்ட சாதி பெயர்களை குறிப்பிட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று பதிவிடப்பட்டதுக்கு, பெரும்பாலான ட்விட்டர் வாசிகளிடமிருந்து பல எதிர்ப்பு பதிவுகள் எழுந்தது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கின் இத்தகைய பதிவை பார்க்கும் போது, தமிழகத்தில் சாதியை பார்த்து தான் நிவாரண உதவி வழங்கப்படுகிறாதா என்ற அச்சம் ஏற்படுகிறது.

இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கொரானா நிவாரண உதவிகளை சாதி பார்த்து வழங்குகிறார் என்ற செய்தி வெளியானதும் அவசர அவசரமாக அந்த சாதிய பதிவுகளை கலெக்டர் அலுவலகம் நீக்கியது.
இந்த செய்தியை பதிவு செய்யும் நேரத்தில் அனைத்து போட்டோக்களையும், சாதி கண்க்கீடு படி வழங்கிய விவரங்களும் நீக்கப்பட்டது.

ஒரு மாவடத்தின் ஆட்சித் தலைவர் என்ற அதிகாரத்தில் அமர்க்கிற ஒருவருக்குள் இத்தகைய சாதி உணர்வு பதிவுகள் இருந்தால் அது ஒட்டுமொத்த அரசின் சாதி உணர்வாகத்தான் பார்க்கப்படும்.
தமிழக அரசின் கவனத்திற்கு இந்த விவகாரம் எடுத்து செல்லப்பட்டதால் தான் முதல்வர் அலுவலக உத்தரவின் பேரில் அந்த சாதி பதிவுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நீக்கியதாக கடைசி நேர தகவல் கிடைத்தது.

அரசின் செயல்பாடுகளில் இன்னமும் சாதி பாகுபாடு இருக்கும் பட்சத்தில் ஆண்டாண்டுகள் வந்து போனாலும் சாதி ஒழிப்பு என்பது வெறும் பதிவில் மட்டுமே இருக்கும் நிஜத்தில் எப்போதும் ஒழியாது!

1,352 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன