புதன்கிழமை, மே 15
Shadow

மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 லட்சம் பேர் மதுபானங்களை குடிப்பதால் ஏற்படுகிற பாதிப்பு காரணமாக மரணம் அடைகின்றனர்.

இவை தவிர சமூகத்திலும் மது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பல்வேறு குற்றங்களை தயக்கமே இன்றி செய்து சட்டத்தின் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையையும் அழித்துக் கொண்டு தங்களது குடும்பத்தினர் வாழ்க்கையையும் அழிக்கிறார்கள்.

இந்த சூழலில் தற்போது உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரானா வைரசை ஒழிக்க மருத்துவ உலகம் போராடி வருகிறது.
அதே நேரம் உலக அளவில் பல நாடுகளிலும் மது குடித்தால், அது கொரானா வைரசிடம் இருந்து பாதுகாக்கும், கொரானா வைரசை மது பானங்கள் கொன்று விடும் என்றெல்லாம் தவறான தகவல்கள் சமூக வலைத்தளகளில் வெளியானது.

இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. இதெல்லாம் கட்டுக்கதை என கூறியுள்ளது.

அதோடு எந்த வகையிலும் ஆல்கஹால் (மதுபானங்கள்), கொரானா வைரஸ் தொற்று நோயில் இருந்து ஒருவரை பாதுகாக்காது என திட்டவட்டமாக கூறியுள்ளது.

மேலும், மக்கள் மது அருந்தும் பழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மதுபானங்களை அருந்தினால், அது உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும், வன்முறையில் ஈடுபட தூண்டும், மன நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை செய்து உள்ளது.

இது தொடர்பாக, பொது சுகாாரத்தின் ஒரு பகுதியாக உலக சுகாதார நிறுவனம், துணைவர்களுடன் இணைந்து உண்மை கண்டறியும் ஆய்வை மேற்கொண்டது.

ஆல்கஹால், கொரானா வைரஸ் ஆகிய இரண்டையும் பற்றிய கட்டுக்கதைகளையும், உண்மைகளையும் ஆராய்ந்தது.

குறிப்பாக, அதிக போதை ஏற்படுத்தக்கூடிய மதுபானங்கள், கொரானா வைரசை கொல்கிற வலிமையை கொண்டுள்ளதா என்றெல்லாம் ஆராயப்பட்டது.

அதன்முடிவில், கொரானா வைரஸ் தொடர்பான வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கி உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அதிகமான வலிமை கொண்டுள்ள ஆல்கஹாலை குடித்தால் அது கொரானா வைரசை கொல்லும் என்பது கட்டுக்கதை. இதில் துளியும் உண்மை இல்லை.

* எந்த வகை மதுபானங்களை பருகினாலும், அவை பொதுவாகவே உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு ஏற்படுத்தும்.

* எந்த நேரத்திலும் பொதுமக்கள் மதுபானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கொரானா வைரஸ் தொற்றுநோய் பரவி வருகிற காலகட்டத்தில் மது பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

இந்த எச்சரிக்கை காரணமாக மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சி அடைவார்கள்.

அதனால ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை.

 

386 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன