ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

கொடூர கொரானாவை ஒழிக்க உலக நாடுகளுக்கு மருந்து அனுப்பிய இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு!

 

 

கொடூர கொரானாவை ஒழிக்க உலக நாடுகளுக்கு மருந்து அனுப்பிய இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு!

உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் கொரானா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டது.

இந்த மாத்திரைகள் இந்தியாவில் தான் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவில் கொரானா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதால், இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.


இதற்கிடையே, கொரானாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என அமெரிக்கா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவை கேட்டுக் கொண்டன. இதனால் ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு விதித்த தடையை மத்திய அரசு நீக்கியது.

இதையடுத்து, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அந்த மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.

மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொரானா பெருந்தொற்று நோய் என்பதால் அதை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராடவேண்டும். இந்த விஷயத்தில் ஒவ்வொரு நாடும் தன்னால் இயன்ற உதவிகளை மற்ற நாடுகளுக்கு செய்ய வேண்டும் என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், கொரானா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து அனுப்பியதற்காக இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

957 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன