வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

மறு உத்தரவு வரும்வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

 

மறு உத்தரவு வரும்வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

கொரானா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அரசின் ஊரடங்கு உத்தரவு, மக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றால் கொரானா பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையே, பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஏப்ரல் 20-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். அதன்பின் தளர்வுகள் இருக்கும். ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதிவிலக்குகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி நாட்டில் கொரானாவுக்கு இதுவரை 507 பேர் பலியாகி உள்ளனர்.  இந்தியாவில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 1,372 பாதிக்கப்பட்ட நிலையில் 365 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்கள். 15 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் நாளை முதல் அமலாக உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் தொடர்பாக தமிழக அரசின் சிறப்பு குழு ஆலோசனை நடத்தியது. இந்த குழுவின் ஆலோசனைகள் முதலமைச்சர் பழனிசாமியிடம் நாளை தெரிவிக்கப்படும். குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுக்க உள்ளார்.

அதனால், அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவித்துள்ளது.

335 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன