
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் ஏன் பெட்ரோல் டீசல் விலையை மோடி அரசு குறிக்கவில்லை? ராகுல் காந்தி கேள்வி
சர்வதேச சந்தையில் கொரானா பாதிப்பு காரணமாக கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவில் விலை குறைந்தது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறையலாம் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ‘டுவிட்டர்‘ பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலை முறையே லிட்டருக்கு ரூ.69-க்கும், ரூ.62-க்கும் விற்று வரும் அரசு எப்போது இவற்றின் விலைகளை குறைக்கப்போகிறது? உலக அளவில் கச்சா எண்ணெய் விலை எதிர்பாராத அளவில் குறைந்து உள்ள நிலையில் இன்னும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது? இந்த பேரிடர் காலத்தில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து இருப்பது மிகவும் நல்லது. மத்திய அரசு எப்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்?
இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.
