சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

முதல்வர் உட்பட தலைமைச்செயலக ஊழியர்கள்,பத்திரிகையாளர்களுக்கு கொரானா டெஸ்ட்!

 

கொரானா வைரஸ் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கும் பரவியதால் அவர்கள் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் எந்தெந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கு பெற்றார்கள் அவர்களுக்கும் கொரானா பரவி இருக்கலாமா என்ற பதட்டம் ஏற்பட்டது.

மேலும், ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகமே மூடி சீல் வைக்கப்பட்டது.

இந்த சூழலில் சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர் அறை, கூட்டரங்குகள் போன்றவற்றில் கொரானா தொற்று இருக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகின. அதனால் அங்கெல்லாம் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் பணிக்கு வரும் ஒவ்வொருவருக்கும் நேற்று முன்தினம் பிற்பகலில் ‘ரேபிட் டெஸ்ட்’ உபகரணம் மூலம் கொரானா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அரசு டிரைவர்கள், போலீசார், பத்திரிகையாளர்கள் உள்பட 327 பேருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் முதல்வர் உள்பட ஒருவருக்கு கூட கொரானா தொற்று இல்லை என்ற முடிவு வெளியாகி நிம்மதி தந்தது.

அதே நேரம் ரேபிட் டெஸ்ட் கருவி தவறான முடிவுகளை காட்டுவதாகவும் , மறு உத்தரவு வரும் வரை ரேபிட் கிட் மூலமாக டெஸ்ட் செய்ய வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

640 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன