
தமிழகத்தில் கொரானா நிவாரண நிதியாக 161 கோடி வந்துள்ளது!
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இப்பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 13-ந் தேதிவரை மொத்தம் 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் வரப்பெற்றுள்ளது.
கடந்த ஏழு நாட்களில் மட்டும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 208 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் ஆகும்.
இதுவரை நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் முதல்-அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
