வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் வடபழனி ஆட்டோ டிரைவர்களுக்கு கொரானா நிவாரண உதவிகள்!

 

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் வழபழனி ஆட்டோ டிரைவர்களுக்கு கொரானா நிவாரண உதவிகள்!

கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க
முடியாமல் தவித்து வருகின்றனர் …இந்த நேரத்தில் கலப்பை மக்கள் இயக்கத்தின்
தலைவர் PT செல்வகுமார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் .

.குறிப்பாக மொழி பேச
தெரியாமல் உதவி பெற முடியாமல் தவித்த கேளம்பாக்கம் பர்மா அகதிகளுக்கும் , தெலுங்கு
மொழி பேசும் கட்டிட தொழிலாளர்களும் 250 மூட்டை அரிசி பைகளையும் மளிகை சாமான்களையும் வழங்கி அந்த மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி மிக பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார்கள் .

நெல்லை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கும் 100 மூட்டை அரிசிகள் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது .

இப்போது வடபழனியில் சாலிகிராமம் சுற்றுவட்டார ஆட்டோ டிரைவர்களுக்கு கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PTசெல்வகுமார் உதவிப் பொருட்களையும் மளிகை சாமான்களையும் வழங்கினார் .

இந்த நற்பணியில் நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி பேசியதாவது : இந்த இக்கட்டான சூழ்நிலையில் இவ்வளவு அழகாக சமூக இடைவெளியை
கடைப்பிடித்து ,அதிலும் அன்றாடம் கஷ்டப்படும் ஆட்டோ ஓட்டும் கூலி தொழிலாளர்களை
அவர்களுக்கு இன்று உதவி செய்தது ஒரு புண்ணியமான விஷயமாகும் ..கொரானா வைரஸ்
பரவிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் வெளியில் செல்ல வேண்டாம் என்று வீட்டில் கூட சொன்னார்கள் …ஆனால் இந்த நல்ல விஷயத்தை செய்யும் தருணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று துணிச்சலாக வந்தேன் ..இப்படி ஒரு உதவியை முன்னெடுத்து நடத்தும்
கலப்பை மக்கள் இயக்கத்தினருக்கு மனதார பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்


பின்னர் பேசிய கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் PT செல்வக்குமார் :
தமிழகத்தில் கொடுமையான வைரஸ் பரவிய பிறகும் சில குறிப்பிட்ட ஊர்களில் தெய்வத்திற்கு சமமான மருத்துவர்களை உள்ளே அனுமதிக்கமாட்டோம் என்று சொன்னவர்கள் உண்மையிலே மனிதநேயமற்ற அரக்கர்கள் ,அவர்களை தான் முதலில் இந்த அரசு ஒதுக்க வேண்டும்.

இன்று இந்த ஆட்டோ ஓட்டுனர்களை கண்டுபிடித்து உதவி செய்தது கூட காரணம் என்னவென்றால் அன்றாட
வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் ,ஏழை ஆட்டோ ஓட்டுனர்கள் தினமும் வாடகை ஆட்டோ ஓட்டியே வாழ்கிறார்கள் . இவர்களுக்கு இந்த உதவியை வழங்கி இருக்கிறோம்

இதை பார்த்து இவர்களுக்கு
இன்னும் நிறைய பேர் உதவ வேண்டும் என்ற எண்ணத்திலே செய்தோம் .

வடபழனியில் ஆட்டோ ஓட்டுனர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இத்தனை பேர் ஒரே இடத்தில் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது ..தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .

இந்த நிகழ்ச்சியில் மேற்கண்ட பணிகளுக்கு டபுள் மீனிங் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் உதவியாக இருந்தார்.. மற்றும் கலப்பை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், துணை தலைவர் நந்தகுமார், செந்தில் பி‌‌ரபு, ராஜ்குமார் கலந்து கொண்டார்கள்.

1,427 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன