
ஊரடங்கை மீறியதாக கைதாகி விடுதலை செய்யப்பட்டவர்களிடம் 2.68 கோடி வசூல்… ஒரே நாளில் 1.22 கோடி வசூல்!
ஒரே நாளில் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் பொதுமக்களிடம் அபராதமாக வசூலித்த போலீஸ்.
கொரானா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அரசு குறிப்பிட்ட நேரத்தில் சென்று தேவைப்படும் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
விதிகளை மீறி செல்பவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து வருகிறது.
ஊரடங்கு விதிகளை மீறியதாக 2 லட்சத்து 84 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விதிமுறைகளை மீறி சாலைகளில் வந்த சுமார் 2 லட்சத்து 39 ஆயிரம் பைக், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதோடு அபராதமாக 2 கோடியே 68 லட்சம் ரூபாய் பொது மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு உள்ளது.
அதிலும் ஒரே நாளில் மட்டும் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் அபராதமாக பொது மக்களிடம் இருந்து போலீஸ் வசூலித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
