ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

கேரளாவை பாலோ செய்யும் திருப்பூர் கலெக்டர்!

 

 

கேரளாவை பாலோ செய்யும் திருப்பூர் கலெக்டர்!

கொரானாவின் தாக்கம் காரணமாக அதன் பரவலை தடுக்க பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பெரும்பாலான மக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு கடைகளில் பொருட்களை வாங்கி வருகிறார்கள்.

இந்த சூழலில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வெளியில் வரும்போது அவசியம் குடை பிடித்தபடிதான் வர வேண்டும் என கேரளாவில் உத்தரவிடப்பட்டது. பொதுமக்களுக்கு குடைகளும் வழங்கப்பட்டது.

குடை பிடிக்காமல் வருகிறவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்றும் கூறியிருந்தனர்.

இப்போது தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்து உள்ளது. குடிமகன்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்த திருப்பூர் கலெக்டர் குடை மேட்டரை கையில் எடுத்து இருக்கிறார்.

திருப்பூரில் மது வாங்க மதுக்கடைகளை தேடி வரும் நபர்கள் கைகளில் குடை பிடித்த படி வர வேண்டும். குடை பிடிக்காமல் வருகிற யாருக்கும் மது வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டு இருக்கிறார். இந்த உத்தரவு கடைபிடிக்கப் படுமா காற்றில் பறக்கவிடப்படுமா?

392 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன