
தமிழகத்திலும் மதுவிலை உயர்வு… நாளை முதல் அமலுக்கு வருமாம்!
கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பகுதிகளில் சில தளர்வுகளோடும் சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வரி உயர்த்தப்பட்டு உள்ளதால், மதுபானங்களுக்கான விலையும் உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் முன்பு இருந்ததை விட 75 சதவீதம் மதுபான விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆந்திர குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் மதுப் பழக்கத்திலிருந்து குடி மக்கள் விடுபட தான் விலை உயர்த்தப்பட்டதாக முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பிற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் விலை உயர்த்தப்படுகிறது. இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரியை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால் மதுபானங்கள் விலை 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக டாஸ்மாக் தெரிவித்துள்ளது.
நடுத்தர, பிரீமியம் வகை 180 மிலி மதுபான பாட்டில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட மதுபானங்களின் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துளள்து
