ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

கொரானாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை- அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது TTV

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரானா  நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை எடுக்கலாம் என்ற திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ‘ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என கைகளைத் தலைக்கு மேல் தூக்கிவிட்டார்களோ?’ என்ற பீதியை  மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. கொரானாவால் பாதிக்கப்படும் எல்லோரின் வீட்டுகளிலும் அந்தளவுக்கு வசதிகள் இருக்குமா?.

4,000 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இடமில்லாத அளவுக்கு நோயாளிகள் நிரம்பி வழிவதாக வரும் செய்திகள் அவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை

இதன்பிறகாவது தங்களின் ‘ஈகோ’வை விட்டொழித்து, உண்மையைக் கூறி மக்களைக் காப்பாற்றத் தேவையானவற்றை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

413 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன