ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

சேற்றில் இறங்கி நாற்று நடுகிறார், டிராக்டர் ஓட்டி வயலை உழுகிறார் – அசத்தும் தமிழ் ஹீரோயின்

 

 

கொரானா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி உள்ள திரைத்துறையினர் அடிக்கடி ஏதாவது வித்தியாசமான விஷயங்களை செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

தும்பா ஹீரோயின் கீர்த்தி பாண்டியன் தனது வயலில் விவசாய பணிகளை செய்து முழு நேர விவசாயியாக மாறி இருக்கிறார்.

வயலை உழுவதற்கு டிராக்டர் ஓட்டுகிறார். பாவாடையை தூக்கி சொருகிக் கொண்டு சேற்றில் இறங்கி நாற்று நடுகிறார்.

இந்தபடங்களையும் வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டு “மனசுக்கு நிறைவான வேலை செய்ததாக” மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே நடிகர் அர்ஜுன் தனது பண்ணையில் உள்ள மாடுகளுக்கு வைக்கோல் ஏற்றி வந்த படம் இணையத்தில் வைரலானது.

1,012 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன