
மே17க்கு பின் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு!?
கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முடங்கி உள்ளது.
இந்த நிலையில் வரும் 17ம் தேதியுடன் 3ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அடிப்படை தேவைகள், வேலையில்லா பணியாளர்கள் , கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி ஆகியவைகளால் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டால் அது பெரும் சிக்கலுக்கு வழி வகுத்து விடும் என்பதால் சில கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படலாம் என தெரிகிறது.
தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு, போக்குவரத்து துறை செயலாளர் மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் பொது முடக்கம் முடிவடையும் போது 50% பேருந்துகளை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு முகக்கவசம், கையுறை மற்றும் சானிட்டைசர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பேருந்தில் பயணிகள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை பேருந்துகளில் அனுமதிக்க கூடாது. பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்க கூடாது. இருக்கைகளில் இடைவெளி விட்டு எண் குறிப்பிட வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகளும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன
