
நெருப்புடா விமர்சனம்
கோடங்கி
வேலை என்று செய்தால் அது `தீயணைப்பு வீரர்’ பணிதான் என்ற லட்சியத்தை கொண்ட இளைஞன்தான் விக்ரம்பிரபு இவரது நண்பர்கள் 4 பேரும் இவரோடு கைகோர்க்கிறார்கள். இந்த ஐவர் குழு சொந்தமாக தீயணைப்பு வாகனம் ஒன்றை வைத்துக் கொண்டு தீ பிடிக்கும் இடங்களுக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியை செய்கிறார்கள். தீயணைப்பு துறையில் சேருவதற்கு முயற்சிக்கிறார்கள். இதற்காக தேர்வு எழுத காத்திருக்கிறார்கள். தேர்வுக்கு முதல் நாள் இரவு ஒரு எதிர்பாராத சம்பவம் இந்த 5 பேரில் ஒருவருக்கு நடக்கிறது. அதன் மூலம் ஏற்படும் திருப்பங்களால் இவர்கள் தேர்வு எழுதினார்களா, இவர்கள் லட்சியம் வெற்றி பெற்றதா… அந்த சம்பவத்தால் ஹீரோவுக்கு என்ன பாதிப்பு என்பதை எல்லாம் சொல்கிறது நெருப்புடா படம்.
சென்னை சிலேட்டர்புரத்தைச் சேர்ந்தவர்கள் விக்ரம்பிரபுவும் அவரின் நான்கு நண்பர்களும். சின்னவயதிலேயே இவர்களுக்கு தீயணைப்பு வீரர்களாக வேண்டும் என்ற ஆசை. வாலிபர்களான பிறகு தனியாகத் தீயணைப்பு வண்டி வைத்து தன்னார்வமாகத் தீயணைக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். தீயணைப்புத் துறை வேலைக்கும் விண்ணப்பிக்கிறார்கள். அதற்கான தேர்வு எழுதுவதற்கு முதல் நாள் திடீரென 5 நண்பர்களில் ஒருவருக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கலில் வில்லன் கோஷ்டியை சேர்ந்த வின்செண்ட் அசோகன் இறந்து போகிறார். கொலைப்பழி வந்து விடுமோ என்று அச்சப்படும் நண்பனுக்கு ஆறுதல் சொல்லும் விக்ரம்பிரபு இதை அந்த பகுதியின் கவுன்சிலரான மொட்டை ராஜேந்திரனிடம் கொண்டு செல்கிறார். அவரோ வில்லன் மதுசூதனனின் முக்கியமான வலதுகரம் செத்திருப்பதால் உதவி செய்ய முடியாமல் ஒதுங்கிக்கொள்கிறார்.
இனியாரையும் நம்பி பயன் இல்லை வில்லனை நாமே தூக்கி விடவேண்டும் என்று புறப்படும் நண்பர்களுக்கு அங்கே திடுக் திருப்பம் ஏற்படுகிறது. அதன்பிறகு வில்லன் கோஷ்டி இவர்களை கண்டுபிடித்து தாக்க வருகிறது.
வழக்கமான ஹீரோவாக வில்லன் கோஷ்டியை அடித்து தும்சம் செய்து வில்லனையும் மிரட்டிவிடுகிறார் ஹீரோ. போலீசும் எப்படியாவது வில்லனை என்கவுண்டரில் போட்டுத்தள்ள நேரம் பார்த்து வருகிறது.
இந்த சூழலில் வில்லனால் விக்ரம்பிரபு மிரட்டப்படுகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத போது திடீரென விக்ரம்பிரபுவின் அப்பா பொன்வண்ணன் கொலை செய்யப்படுகிறார்.
அதிர்ச்சியில் வில்லனை தேடி விக்ரம்பிரபு போகும்போது பார்த்தால் அங்கே வில்லனும் அவன் ஆட்களும் கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை கொன்றது யார் என போலீசும், விக்ரம்பிரபுவும் குழப்பத்தில் இருக்க… விக்ரம்பிரபுவின் நண்பர்கள், விக்ரம்பிரபுவின் காதலி நிக்கி ஆகியோர் காணாமல் போகிறார்கள்.
அவர்களை கடத்தியது யார் ? விக்ரம்பிரபுவின் கனவு நிஜமானதா? வில்லன் யார் என்பதுதான் நெருப்புடா கிளைமாக்ஸ் சொல்கிறது.

நடிகர் விக்ரம்பிரபு முன்பைவிட நடிக்க கற்றுக்கொண்டார். முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டு தெரிகிறார். தீ எதை வேணா எடுத்துகிட்டு போகலாம் ஆனா ஒரு உயிர கூடஎடுக்க விடமாட்டோம் என்று வசனம் பேசி அதற்கேற்றார்போல தீக்குள் புகுந்து ஆட்களை காப்பாற்றுகிறார் விக்ரம்பிரபு.
இவரைபோலவே இவர் காதலி நிக்கி கல்ராணியும் உயிரைகாக்கும் மருத்துவர் ஆவதற்காக மருத்து மாணவியாக நடித்திருக்கிறார். நண்பர்களுக்கு ஒன்று என்றால் ஆக்ஷனில் அடித்து தும்சம் செய்கிறார். காதலியோடு ரொமான்ஸ் பாட்டுபாடி ஆடுகிறார். விக்ரம்பிரபுவின் நண்பர்களாக வரும் வருண், `கயல்’ வின்சென்ட், ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்.
ஒரு தீயணைப்பு வீரர் எப்படி இருக்க வேண்டும், தீயணைப்பு பணி என்றால் என்ன என்பதை திரைக்கதையில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் அசோக். திரைக்கதையில் காட்சிக்கு காட்சி திடுக் திருப்பங்கள் வைத்திருப்பது படத்திற்கு பெரிய பலம் ஆக இருந்தாலும் இன்னும் கதையிலும், விக்ரம்பிரபு காட்சிகளிலும் கவனம் வைத்திருந்தால் படத்துக்கு பலம் சேர்ந்திருக்கும். திடுக் திருப்பங்கள் அதைப்போலவே யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் சிறப்பாக இருந்தாலும், கிளைமாக்ஸ் காட்சிக்கான சம்பவத்திற்கு திரைக்கதையில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை பல இடங்களில் படத்துக்கு ஒட்டாமல் எங்கோ செல்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
மொத்தத்தில் ‘நெருப்புடா’ அனல் குறைவுதான்… ரசிகர்களிடம் தீப்பிடிக்க தாமதம் ஆகும்..!
கோடங்கி
