வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

மே 12ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்க இரயில்வே துறை அறிவிப்பு

 

 

மே 12ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்க இரயில்வே துறை அறிவிப்பு.

 

கொரானா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 17-ந்தேதி வரை அமலில் உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நடைமுறையில் உள்ள ஊரடங்கு மே17ம் தேதிக்கு பிறகு தளர்வுகளோடு ஊரடங்கு விலக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரெயில்வே துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

மே 12 ந்தேதி முதல் டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படும்.

முன்பதிவு டிக்கெட்டுகள் உள்ளவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவர். சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மாலை 4 மணி முதல் தொடங்கும். கொரானா தொற்று இல்லாமல் மாஸ்க் அணிந்து வருவோர் மட்டும் ரெயிலில் அனுமதிக்கப்படுவர்.

20,000 ரெயில் பெட்டிகள் கொரானா சிகிச்சை சிறப்பு வார்டுகளாக மாமற்றப்பட்டுள்ளன. சென்னை, செகந்திராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, அகமதாபாத், ஜம்மு தாவிக்கு ரெயில் இயக்கப்படும். திப்ரூகர், அகர்தலா, ஹவுரா , பாட்ன, பிலாஸ்பூர் ராஞ்சி புவனேஷ்வருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

கொரானா தீவிரம் குறையாமல் இருக்கும் நிலையில் ரயில் சேவை தொடங்குவதற்கான அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

447 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன