செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

கலெக்டர்களுடன் மே 13ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்!

மே 13ம் தேதி மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த திட்டம்

தமிழகத்தில் கொரானா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 7 ஆயிரத்து 204 பேர் பாதிப்படைந்து உள்ளனர். தலைநகர் சென்னையிலும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கானது வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் அதற்கு முன்பே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 13-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரானா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 17-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
429 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன