வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொடூர கொலைக் குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் – பத்திரிகையாளர் கோடங்கி வேண்டுகோள்

 

 

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொடூர கொலைக் குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் – பத்திரிகையாளர் கோடங்கி வேண்டுகோள்

மனம் நிறைந்த வேதனையுடன் ஒரு பத்திரிகையாளனாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தையும், அந்த மாணவியின் மரண வாக்குமூலத்தையும் பார்த்த ஒவ்வொரும் ஒரு கணம் மூச்சை நிறுத்தி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருப்போம்.

இந்த படுபாதக கொடூர செயலை செய்த அதிமுகவை சேர்ந்த கலியபெருமாள், முருகன் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி அளித்து தனது கடமையை முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி முடித்து கொண்டார்.

எதிர்க்கட்சிகளும் நிவாரண நிதி அறிவித்து சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் தமிழக காவல்துறை இந்த படு பாதக கொடூர அரக்கத்தனமான மனித மிருகங்கள் எந்த சூழ்நிலைகளிலும் தப்பித்து விட முடியாதபடி மிக கவனமாக சட்ட ஆவணங்களை உருவாக்கி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

அதோடு, விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்கள் அல்லது தமிழகத்தில் உள்ள எந்த ஒரு வழக்கறிஞரும் இந்த கொலைகார மனித மிருகங்கங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

எந்த வழக்கறிஞர்களும் இது போன்ற கொடூர கொலைகார மனித மிருகங்களுக்கு ஆஜராகாமல் தவிர்த்தால் இனி இதுபோன்ற கொடூர சிந்தனை கூட யாருக்கும் வராது.
அதோடு இந்த மனித மிருங்கங்களின் வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து உடனடியாக அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனை பெற்றுத்தர காவல்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய திரு நாட்டில் எல்லா அதிகாரங்களை விட நீதியை நிலை நாட்டும் நீதிமன்றங்களும், நீதியரசர்களும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது, இருக்கிறார்கள்  என நம்பிக்கை வைக்கும் சராசரி குடிமகனாக இந்த கோரிக்கையை வைக்கிறேன்.

552 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன