
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இப்போது மீண்டும் அந்த பொருட்களின் மீதான தடையை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரசால் தடை விதிக்கப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றை சேமித்து வைக்கவோ, விற்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை மீறி பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

376 Views
