திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

ஆன்லைனில் ஹால்டிக்கெட் ஜூன் 15ல் திட்டமிட்டபடி 10th,+1 +2 தேர்வு!

 

ஆன்லைனில் ஹால்டிக்கெட் ஜூன் 15ல் திட்டமிட்டபடி 10th,+1 +2 தேர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10, +1 மற்றும் +2 வகுப்பு பொதுத் தேர்வுகள் இந்த மாதம் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூன் 15-ம் தேதி 10 மற்றும் 11-ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஜூன் 18-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீதமுள்ள தேர்வுகள் நடக்கின்றன.

இதற்கான ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களும் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன