வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

ஒரே பெயரில் 25 பள்ளிகளில் வேலை… ஓராண்டில் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய பலே டீச்சர்!

 

 

ஒரே பெயரில் 25 பள்ளிகளில் வேலை… சுமார் ஒரு கோடி ஓராண்டில் சம்பாதித்த பலே டீச்சர்!

இந்த குளறுபடி கூத்து வட இந்தியாவில் உள்ள முக்கியமான உ.பி.யில் தான் நடந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அனாமிகா சுக்லா. அவர் அங்குள்ள மெயின்புரி நகர் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் அறிவியல் ஆசிரியாராக பணியாற்றுகிறார்.

சமூகத்தில் பின் தங்கிய விளிம்பு நிலை பெண் குழந்தைகள் தங்கி படிக்கும் உறைவிட பள்ளியாகும் இது.

இதே பெயரில் உள்ள பள்ளிகள் உத்திர பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது.

உ.பி.யில் அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளம் ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

அனாமிகா சுக்லாவின் பெயர் ஒரே நேரத்தில் ரேபரேலி பள்ளி பதிவேட்டிலும், மெயின்புரி பள்ளி பதிவேட்டிலும் இருப்பது தற்செயலாக கண்டு பிடிக்கப்பட்டது.

பள்ளி வாரியாக பணியாற்றும் ஆசிரியர்களுக்காக மனவ் சம்ப்தா என்ற பெயரில் உருவாக்கப்படும் டேட்டா பேஸ் பதிவின் போது இந்த குளறுபடி கண்டறியப்பட்டது.

இதையடுத்து
அம்மாநிலத்தில் இருக்கும் அனைத்து கஸ்தூரிபா பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அறிக்கை அளிக்கப்பட்டு அனாமிகா சுக்லா என்பவரின் பெயர் வருகை பதிவேட்டில் இருக்கிறாதா என்று கேள்வி எழுப்பட்டது.

இந்த கேள்விக்கு கிடைத்த பதில் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இருக்காதா பின்னே…

25 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் அவரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது என்றும், ஒரு மாதம் 2 மாதமல்ல கடந்த 13 மாதங்களாக, இந்த 25 பள்ளிகளில் இருந்து சுமார் 1 கோடிக்கு மேலே சம்பள பணத்தை அனாமிகா பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திற்கு மேல் பணம் மாதா மாதம் வந்தும் அனாமிகா எந்த தகவலையும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதையடுத்து இந்த மாதம் அவருக்கு அனுப்ப வேண்டிய சம்பளத்தை அரசு நிறுத்தி வைத்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

கொரானா ஊரடங்கு காரணமாக அனாமிகாவை நேரில் அழைத்து விசாரிக்க முடியாமல் அதிகாரிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் சொல்லித் தர வேண்டிய ஒரு ஆசிரியரே இப்படி மோசடி வேலை செய்திருப்பது நாடு முழுதும் கல்வித்துறையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

501 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன