வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18
Shadow

கொரானா சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைத்த கட்டணம் பாதியான மர்மம்!

 

 

தமிழகத்தில் கொரானா பரவல் நாளுக்கு நாள் மிக அதிகமாக உயர்ந்து கொண்டே போகிறது.

இந்த சூழலில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் அதற்கான கட்டணமாக 10 நாளைக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 280 ரூபாயும், 17 நாள் சிகிச்சைக்கு 4 லட்சத்து 31 ஆயிரத்து 280 ரூபாயும் நிர்ணயித்து அரசு அனுமதிக்கு பரிந்துரைக்கபட்டது.

இந்தளவுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிப்பது சாதாரண மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. தனியார் கட்டண கொள்ளைக்கு அரசே துணை போகிறதா என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில்
தமிழகத்தில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரானாவுக்கு 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரானாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணமாக வசூலிக்கலாம்.

தீவிர சிகிச்சை பெறும் கொரானா நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம். மேலும் நிர்ணயிக்கப்பட்டது அதிகபட்ச கட்டணம் என்பதால் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தனியார் கட்டண கொள்ளை புகார் எழுந்ததால் அரசு இந்தளவுக்கு பாதிக்கு பாதி குறைத்து அறிவித்துள்ளதோ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன