வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

அதிகரிக்கும் கொரானா பாதிப்புகளால் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்!

 

 

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்!

இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்ததாக தமிழகத்தில் தான் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இங்கு மட்டும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரானாவுக்கு 22,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரானாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் கொரானாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.

அடுத்த வார கடைசியில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இதனால் அதற்கு முன்பாக தமிழகத்தில் கொரானா தாக்கம், பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழகத்தில் உள்ள மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.

298 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன