செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

சாத்தான்குளம் சம்பவம் ரஜினி ரகசிய ஆறுதல்…

 

ரஜினியின் ரகசிய ஆறுதல்…

சாத்தான்குளம் அப்பா, மகன் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு பலியான சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதோடு, காட்டுமிராண்டி போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் பரிதாப மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை அறிக்கை வாயிலாகவோ, டிவிட்டர் பதிவின் மூலமாகவோ தெரிவித்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் போலீசார் மீது லேசான தாக்குதல் நடந்த போது பொதும்க்களை ரவுடிகள் என குறிப்பிட்டு போலீசாருக்கு ஆதரவாக கொந்தளித்த ரஜினிகாந்த் இந்த சாத்தான்குளம் அப்பா, மகன் போலீசாரின் காட்டுமிராண்டி தனமான கொலை வெறி தாக்குதலில் பலியாகி இத்தனை நாள் ஆன பிறகும் அது குறித்து எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார்.

திடீரென இன்று சாத்தான்குளத்தில் உள்ள பாதிக்கப்பட்ட செல்வராணியிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் சொன்னாராம்.

ஆனாலும், போலீஸ் கொடூர காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டித்து பொது வெளியில் ரஜினிகாந்த் அறிக்கை எதுவும் வெளியிடாமல் ரகசியமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தில் தொலைபேசியில் பேசி ஆறுதல் சொன்னது கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

444 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன