சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

ஜூம் செயலிக்கு போட்டியாக களம் இறங்கும் ஜியோ மீட்!

 

 

ஜூம் செயலிக்கு போட்டியாக களம் இறங்கும் ஜியோ மீட்!

உலகம் முழுதும் கொரானா பாதிப்பால் இயல்பான வாழ்க்கை பெரிதும் தடை பட்டு உள்ளது.

பல நாடுகளில் அரசு ஆலோசனைகள், முக்கிய சந்திப்புகள் கூட ஜூம் மீட் எனப்படும் செயலி மூலமாக நடந்து வருகிறது.

இந்த ஜூம் மீட் செயலி பாதுகாப்பானதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தனி நபர் தகவல்களை ரகசியம் காக்க தவறுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த நிலையில் இத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பிரதமர் மோடி தொடங்கி பல அரசியல் கட்சி தலைவர்களும் ஜூம் மீட் செயலி மூலமாக பல கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்போது ஜூம் மீட் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனம் புதிதாக ஜியோ மீட் என்ற செயலியை அறிமுகபடுத்தி உள்ளது.

தற்போது சோதனை முயற்சியாக இந்த ஜியோ மீட் செயலி பிளே ஸ்டோரில் உள்ளது. ஜூம் செயலியை விட நல்ல தெளிவான காட்சியமைபும், சுலபமான இணைப்பு வசதிகளும் உள்ளது இதன் பிளஸ்.

இதே போல சமீபத்தில் தடை செய்யப்பட்ட டிக்டாக்,ஹலோ உட்பட பல செயலிகளும் நமது நாட்டு தயாரிப்பாக வருமா?

222 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன