வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரானா வைரஸ்… மீண்டும் மூடப்படுகிறதா திருப்பதி கோயில்!

அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரானா வைரஸ்… மீண்டும் மூடப்படுகிறதா திருப்பதி கோயில்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 11-ந்தேதி முதல் ஏழுமலையான் கோவிலுக்குள் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து நாளை தேவஸ்தானம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இணையதள வாயிலாகச் சீட்டுகள் விற்கப்பட்டு, தினமும் 12,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மீண்டும் கோயிலை மூடலாமா என்ற ஆலோசனை நடந்து வருகிறது.

அர்ச்சகர் உட்பட கோயில் பணியாளர்கள் 10 பேருக்கு தொற்று உறுதி ஆனதால் இதுவரை கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்து சென்ற அனைவரையும் தனிமையில் இருக்கச் சொல்லும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது.

தரிசன டிக்கெட் வாங்கும் போது ஆதார் அடையாள அட்டை அவசியம் என்பதாலும், தொலைபேசி எண் கட்டாயம் என்பதாலும் தரிசனத்துக்கு வந்து சென்ற அனைத்து பக்தர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முடிவுகள் அனைத்தும் நாளை நடக்கும் தேவஸ்தான அதிகாரிகள் அவசர கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படலாம்.

207 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன