புதன்கிழமை, ஆகஸ்ட் 26
Shadow

சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணமான போலீஸ் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைப்பு!

 

 

சாத்தான்குளம் அப்பா-மகன் படுகொலைக்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 SI உட்பட 2 போலீசார் பாதுகாப்பு கருதி மதுரை சிறைக்கு மாற்றம்!

சாத்தான்குளத்தை சேர்ந்த மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில்

.

இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக சிபிசிஐடி போலீசாரால் அறிவிக்கப்பட்டு இருந்த காவலர் முத்துராஜ் தூத்துக்குடியில் உள்ள அரசன்குளத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், 2 எஸ்.ஐ.க்கள், 2 காவலர்கள் பேரூரணி சிறையில் இருந்து பாதுகாப்பு காரணமாக மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வழக்கமாக பிரபலமான ரவுடிகள், கொலைகாரர்கள், அரசியல் பிரமுகர்களைத்தான் பாதுகாப்பு கருதி சிறை மாற்றம் செய்வார்கள். இங்கே தவறு செய்த போலீசார் மாற்றப்பட்டு உள்ளனர்.

429 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன